அருள்மிகு.ஸ்ரீ கோட்டகிரி தஞ்சியம்மன் திருக்கோவில்

இழந்த பணம், சொத்துக்கள், பெயர், புகழ் அனைத்தையும் திரும்ப பெற!!

நல்ல செல்வாக்கோடு வாழ்ந்தவர்கள் கூட திடீரென தன் செல்வங்களை எல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்பது உண்டு. இன்று ஏழையாக இருக்கும் ஒருவர், நாளை பணக்காரனாகவும் செய்கிறார். இப்படி நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் நம்முடைய இழந்த பெயர், புகழ், சொத்து, பணம், செல்வங்கள், கௌரவம் என்ற அனைத்தையும் திரும்பப் பெறுவதற்கு மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் சுயம்பு அருள்மிகு ஸ்ரீ கோட்டகிரி தஞ்சி அம்மன் ஆலயம், இங்கு இரண்டு தீபத்தை அம்மனுக்கு ஏற்றி வழிபட்டால் போதும்..

செல்வங்களை மட்டுமல்லாமல் குழந்தை வரம் அருளுவதிலும் கருணை உள்ளம் கொண்டவளாக திகழ்கின்றாள், சுயம்புவாகத் தோன்றிய இந்த அம்மனை வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்ற பிரச்சினைகள் உடனடியாகத் தீரும் என்கிற நம்பிக்கை உண்டு, மேலும் தஞ்சி அம்மனை வழிபாடு செய்வதால் திருமணத்தில் இருக்கும் தடைகளும் எளிதாக அகலும், மக்களைக் காக்க சுயம்பாக அவதாரம் எடுத்த இந்த தஞ்சி அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது சிறப்பு

தோல்வி, அவமானம், எதிர்ப்புகள் ஆகியவற்றை சமாளிக்கும் மன வலிமையை அதிகரிக்க தஞ்சி அம்மனை மனதார வழிபட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். முடியவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் காரியத்தை கூட உடனே முடித்துக் காட்டும் வல்லமை படைத்தவள் தஞ்சி அம்மன் ஆவார். இந்த தஞ்சி அம்மனுக்கு 8 வெள்ளிக்கிழமைகளில் சுத்தமான மண் அகல் விளக்கு இரண்டு எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு

தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வந்தால் இழந்த அத்தனையும் நமக்கு சீக்கிரமாகவே திரும்ப கிடைக்கும். மேலும் நம் பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அது நியாயமானதாக இருந்தால் நிச்சயம் இவ்வாறு செய்து வர நிச்சயம் உங்கள் பிரச்சனைகள் விரைவில் தீரும். தீராத பிரச்சனை, தீராத துன்பம், நிறைவேறாத ஆசைகள் அத்தனையும் கண்டிப்பாக நிறைவேறும்